பனிப்பொழிவால் ஆறு பேர் பலி ஆயிரம் பேர்வரையில் காயம்: யப்பானில்

japan-schnee

யப்பானில் கடந்த ஐம்பதாண்டில் இல்லாதளவு பனிப்பொழிவு ஏற்பட்டள்ளமையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டிட இடிபாடு மற்றும் வாகன விபத்தினால் ஆறு பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பனிப்பொழிவு காரணமாக ஆயிரம் பேரிற்கு மேல் காயமடைந்துள்ளனர்.

யப்பானின் தலைநகர் டோக்கியோவில் 30 சென்ரி மீட்டருக்கு பனித்துகள் கொட்டிக்கிடப்பதாக யப்பானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடரூந்து, பேரூந்து மற்றும் வானூர்தி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 500 மேற்பட்ட வானூர்தி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதேவேளை, யப்பானின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மேலும் பனிப்பொழிவு இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.
japan-schnee

japan - schnee